ADDED : ஏப் 24, 2026 07:13 PM

புதுச்சேரி: விளையாட்டு போட்டியில் சாதித்த கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. உடற்கல்வி துறை இயக்குநர் உதயசந்திரன் வரவேற்றார். போட்டிகளை நிறுவனத்தின் இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ கலைஞர் பழனிவேல் பேசுகையில், 'மாணவர்கள் உடலையும் உள்ளத்தையும் சரியாக பராமரித்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியும். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை மாணவர்கள் கற்றுக் கொண்டால் இதன் வழியாக வருவாய் ஈட்ட முடியும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, கல்லுாரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பத்மஸ்ரீ பழனிவேல் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் விளையாட்டு பிரிவு செயலர் விஜய் நன்றி கூறினார்.
