/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு பூங்கா பாகூர் மக்கள் கோரிக்கை
/
விளையாட்டு பூங்கா பாகூர் மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 16, 2025 10:09 PM
பாகூர்: பாகூரில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் 1400 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஊர் பாகூர். இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க மூலநாதர் கோவில், ஏரி உள்ளிட்டவைகள் உள்ளன. பாகூரில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகர் புறங்களில் உள்ளது போன்று நடைபயிற்சி மேற்கொள்ளவோ, சிறுவர்கள் விளையாடி மகிழவோ பொழுது போக்குவதற்கென்று பூங்கா போன்ற பாதுகாப்பு வசதி கொண்ட எந்த இடமும் இல்லை.
இதனால், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் விடுமுறை நாட்களில் விளையாடி உடல் ஆரோக்கியம் பெற்று பயனுள்ளதாக மாற்ற முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி வருகின்றனர். ஒரு சிலர், புதுச்சேரி, கடலுார் போன்ற நகர பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை அழைத்து சென்று வருகின்றனர். பெரும்பாலன பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியூர்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால், பாகூரில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில், விளையாட்டு பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது தொடர்பாக, எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது.
அதே நேரத்தில் இளைஞர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்காக பாகூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.அதுபோல், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, பாகூரில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.