தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு வீரர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

 விளையாட்டு வீரர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

 விளையாட்டு வீரர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 15, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், மூர்த்தி, அன்பு நிலவன், சந்துரு, சுரேஷ், செல்வ மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கல்வித்துறையில் இருந்து விளையாட்டு துறையை முழுமையாக பிரித்து தனித்துறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித்துறையில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு நிர்வாக அதிகாரி, தலைமை செயல் அதிகாரி பதவிகளை வழங்கக் கூடாது. தகுதி வாய்ந்த விளையாட்டு சங்கங்களுக்கு உடனடியாக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதை போல் புதுச்சேரியில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும். உடல் தகுதி தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கவல்லுநர்கள் குழு நியமிக்க வேண்டும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய உதவி, மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிரைவேற்றாவிட்டால் அரசை கண்டித்து போராட்டங்களை நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us