/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலை.,யில் நாளை ஸ்பாட் அட்மிஷன்
/
புதுச்சேரி பல்கலை.,யில் நாளை ஸ்பாட் அட்மிஷன்
ADDED : அக் 17, 2024 04:42 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு யூ.ஜி., பி.டெக்., படிப்புகளுக்கு ஸ்பாட் அட்மிஷன் நாளை 18ம் தேதி நடக்கின்றது.
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கும் இந்த அட்மிஷனில் கியூட் தேர்வு எழுதி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.நேரடியாக அந்த துறைகளுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
கியூட் ரேங்க் தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் இந்த ஸ்பாட் அட்மிஷனில் அனைத்து சான்றிதழ்களுடன் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். நேர்காணலில் பங்கேற்க உள்ள தகுதியான மாணவர்களின் பட்டியல், (https://www.pondiuni.edu.in/admissions-2024--25/) தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

