/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனிக்கிழமை தோறும் குறைதீர்வு முகாம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவு
/
சனிக்கிழமை தோறும் குறைதீர்வு முகாம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவு
சனிக்கிழமை தோறும் குறைதீர்வு முகாம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவு
சனிக்கிழமை தோறும் குறைதீர்வு முகாம் போலீசாருக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவு
ADDED : அக் 08, 2024 03:07 AM
புதுச்சேரி: அனைத்து போலீஸ் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடத்த வேண்டும்என, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமை தாங்கினார். எஸ்.பி., க்கள் லட்சுமி சவுஜன்யா, பக்தவச்சலம், வீரவல்லபன், வம்சிதரெட்டி மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா பேசுகையில், போலீசாரின் தீவிர ரோந்து மற்றும் அடிக்கடி நடத்தப்படும் வாகன சோதனைகள் மூலம் திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதனால் ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பெண்களை கேலி செய்தல், பொது இடத்தில் மதுபானம் குடிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பள்ளி கல்லுாரிகள் அருகில் சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை ஒழிக்க வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணி முதல் 12:30 வரையில், போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடத்த வேண்டும். அதில் எஸ்.பி.,க்களும் கலந்து கொள்ள வேண்டும்.பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என, உத்தரவிட்டார்.