/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விசாரணையை துவக்கிய சீனியர் எஸ்.பி., கலைவாணன்
/
விசாரணையை துவக்கிய சீனியர் எஸ்.பி., கலைவாணன்
ADDED : மார் 08, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் விசாரணையை துவக்கினார்.
புதுச்சேரி கொலை வழக்கை விசாரிக்க சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் அதிகாரியான சீனியர் எஸ்.பி., கலைவாணன் நேற்று காலை சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்த கழிவுநீர் வாய்க்கால் மற்றும் அங்குள்ள வீடுகளில் ஆய்வு செய்து விசாரணையை துவக்கினார்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் விட்டுச் சென்ற தடையங்களை சேகரித்தார். முன்னதாக டி.ஜி.பி., ஸ்ரீனிவாஸ், சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

