/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
/
புதுச்சேரி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
புதுச்சேரி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
புதுச்சேரி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
ADDED : ஜன 29, 2025 01:54 AM

காரைக்கால்:விசைப்படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும், அருகிலுள்ள தமிழக பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவரின் விசைப்படகில், அதே பகுதி மற்றும் நாகை நம்பியார் நகரை சேர்ந்த 13 மீனவர்கள், கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கு எல்லையில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் கால் மற்றும் முதுகு பகுதியில் காயமடைந்த மீனவர்கள் கிளிஞ்சல்மேடு செந்தமிழ், நம்பியார் நகர் பாபு ஆகியோர், உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
பின், இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 13 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர் மேலும், விசைப்படகு, ஜி.பி.எஸ்., கருவி, மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.