தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

 சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

 சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்


ADDED : ஜன 24, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, காந்தி வீதியில் தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது.

இதையொட்டி, தினமும் காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடந்து வந்தது.

முக்கிய நிகழ்வாக, நேற்று கா லை தேர் வீதியுலா மற்றும் மாலை தீர்த்த வாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை (25ம் தேதி) மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us