/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
/
பிரான்ஸில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
ADDED : அக் 13, 2025 12:45 AM

புதுச்சேரி; பிரான்ஸில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்காலங்கள் தவிர தினமும் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடக்கும். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண கோலத்தை தரிசனம் செய்கின்றனர்.
இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள், ஆன்லைன் மூலம் தரிசனம் செய்கின்றனர். இதேபோல் வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் வெளிநாடுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அவ்வகையில், பிரான்ஸ் பாரிஸில் இந்தாண்டிற்கான ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோற்சவம் அண்மையில் விமர்சையாக நடந்தது. 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இந்திய கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியது. பிரான்ஸ் வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பிரான்ஸ் வெங்கடேஸ்வரா கோவில் தலைவரும், புதுச்சேரியை சேர்ந்தவருமான கண்ணாபிரான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.