தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டாயம் ஹெல்மெட் அணிய போலீசாருக்கு எஸ்.எஸ்.பி., உத்தரவு

 கட்டாயம் ஹெல்மெட் அணிய போலீசாருக்கு எஸ்.எஸ்.பி., உத்தரவு

 கட்டாயம் ஹெல்மெட் அணிய போலீசாருக்கு எஸ்.எஸ்.பி., உத்தரவு


ADDED : மே 21, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் அனைத்து போலீசாரும் தங்களது சொந்த அல்லது அலுவல்ரீதியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது தவறாமல் கட்டாயமாக ெஹல்மெட் அணியவேண்டும் என ஏற்கனவே சுற்றிக்கை அனுப்பபட்டுள்ளது. இருப்பினும் சில போலீசார் இன்னும் ஹெல்மெட் அணியவில்லை, அனைத்து போலீசாரும் ஹெல்மெட் அணிவதை எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும். தங்கள் கட்டுப்பாட்டில் பணியாளர்களும் பணிக்கு வரும்போது ஹெல்மெட் அணிந்துள்ளார்களா என்பதை சரிபார்க்க வேண்டும். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் இதர பொறுப்பாளர்களிடம் வாரந்திர அறிக்கை தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us