புதுச்சேரியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; தி.மு.க., இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
புதுச்சேரியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; தி.மு.க., இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : மார் 02, 2024 06:25 AM

புதுச்சேரி : ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை, பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமையில் தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், 71வது பிறந்த நாள் விழாயொட்டி, பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமையில், தி.மு.க.,வினர் ஒதியஞ்சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், தங்கவேலு, அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர் நடராஜன், அணி அமைப்பாளர்கள் மணிமாறன், சீனு மோகன்தாசு, வீரய்யன், காயத்ரி, நல்குணா, சூர்யா, தொகுதி துணைச் செயலாளர்கள் முருகன், கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார், பிரதிநிதி பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், மாநில துணை அமைப்பாளர்கள் தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், சண்முகசுந்தரம், ஜெயப்பிரகாஷ், ஹரி, அமைப்பாளர் வேல்முருகன், ஸ்ரீதர், வெங்கட், அஜிபாஷா, ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் அகிலன், விஜயகுமார், சாலமன், சரவணன், கர்ணா, முத்து, அன்பு, பிரகாஷ், கிரி, பாக்கியராஜ், ஆட்டோ வினோத், பில்லா, நெல்சன், ராஜவேலு, முரளி, சதீஷ், முருகன் உள்ளிட்டோர் சிறப்பித்தனர்.
