/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
/
ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம்
ADDED : பிப் 20, 2026 05:25 AM

புதுச்சேரி: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் தொகுதி தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் மடுகரையில் நடந்தது.
ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் மாயக்கிருஷ்ணன், துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, அவைத் தலைவர் பூபதி, நிர்வாகிகள் மோகன்குமார், திருநாவுக்கரசு, கிருஷ்ணமூர்த்தி, அருள்பாலாஜி, செல்வம், குமார், பாலு, வேலாயுதம், சுப்புராயன், கல்யாணி, புண்ணியகோடி, சுரேஷ், வீரமணிகண்டன், அண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் சிறப்புரையாற்றி, பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினர்.
தி.மு.க., பேச்சாளர்கள் வேணுகோபால், கருணாநிதி, மாநில அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

