தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாநில சி.எம் – பி.எம் டிராபி கேரம் சாம்பியன்ஷிப் போட்டி

மாநில சி.எம் – பி.எம் டிராபி கேரம் சாம்பியன்ஷிப் போட்டி

மாநில சி.எம் – பி.எம் டிராபி கேரம் சாம்பியன்ஷிப் போட்டி


UPDATED : அக் 20, 2026 06:26 PM

ADDED : அக் 20, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 06:26 PM ADDED : அக் 20, 2026 06:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாநில அளவிலான, 'சி.எம் – பி.எம் டிராபி' கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, உப்பளம் ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

புதுச்சேரி கேரம் அகாடமி மற்றும் பாரதி பவுண்டேஷன் இணைந்து நடந்திய இப்போட்டியை, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் துவக்கி வைத்தார். அக்டோபர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், 5 முதல் 8ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை; பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வரை, கல்லுாரிகள் மற்றும் 22 முதல் 60 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் நடந்தது. திரளான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசளிப்பு விழாவில், பாரதி பவுண்டேஷன் நிறுவனர் ராஜகோபால்சுவாமி வரவேற்றார். புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் மனோகர் வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக தற்காலிக சபாநாயகர் அன்பழகன், கவுரவ விருந்தினராக புதுச்சேரி பா.ஜ., மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி, பாராட்டினர்.

இப்போட்டியில், முதல் 8 இடங்களைப் பிடித்த போட்டியாளர்கள், அடுத்து நடைபெற உள்ள மாநில அளவிலான தரவரிசை கேரம் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் அகில இந்திய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பங்கேற்று விளையாட தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி கேரம் அகாடமி நிறுவனர் சதீஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us