/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி
/
மாநில குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : அக் 27, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று மாலை துவங்கியது.
சிறப்பு விருந்தினராக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். புதுச்சேரி அமெச்சூர் பாக்சிங் சங்க துணை தலைவர்கள் முத்துகேசவலு, கலியபெருமாள், பொதுச்செயலாளர் கோபு, வணிகர் சங்க சீனியர் துணை தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சீனியர், யூத், ஜூனியர், சப்-ஜூனியர் என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என மாநிலம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.