/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு மாநில கவுன்சில்
/
துணை சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு மாநில கவுன்சில்
துணை சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு மாநில கவுன்சில்
துணை சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு மாநில கவுன்சில்
ADDED : நவ 21, 2024 05:41 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை மற்றும் சுகாதார தொழில்முறை படிப்புகளுக்கு தேசிய ஆணையத்தின், மாநில அளவிலான கவுன்சிலை உருவாக்க வேண்டும் என, சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கவர்னர் மற்றும் முதல்வரிடம் அளித்துள்ள மனு;புதுச்சேரியில், மருத்துவ ஆய்வகம் மற்றும் வாழ்வியல், ஊட்டச்சத்து அறிவியல், கண் ஒளியியல் உள்ளிட்ட, 52விதமான துணை மற்றும் சுகாதாரத் தொழில் முறை படிப்புகளை வழங்கும் போலி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை உறுதுணையாக இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பையும், வேலை வாய்ப்பையும் தட்டி பறிக்கும் நிலையை, சுகாதாரத்துறை உருவாக்கி உள்ளது. இதனால் மாணவர்கள் நலன் கருதி, துணை மற்றும் சுகாதாரத் தொழில் முறை கல்விகளுக்கு, தேசிய ஆணையத்தின் மாநில அளவிலான கவுன்சிலை, புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக உருவாக்கி அமல்படுத்த வேண்டும்.

