/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில கிரிக்கெட் போட்டி அமைச்சர் பரிசளிப்பு
/
மாநில கிரிக்கெட் போட்டி அமைச்சர் பரிசளிப்பு
ADDED : நவ 07, 2024 02:58 AM

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகள் வழங்கினார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் கிரிக்கெட் கிளப் சார்பில் 12ம் ஆண்டு மாநில அளவிலான 'சூப்பர் 8' கிரிக்கெட் போட்டி கடந்த செப்., 1ம் தேதி துவங்கி நடந்தது.
இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 48 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டிகளில் ஏம்பலம் வாரியர்ஸ் அணியும், மாஸ்டர் பிலாஸ்டர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில், ஏம்பலம் வாரியர்ஸ் அணி முதலிடத்தையும், மாஸ்டர் பிலாஸ்டர் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.