ADDED : ஏப் 11, 2026 10:28 PM

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், மாநில அளவிலான கோல் ஷாட் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
கோல் ஷாட் பால் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி சார்பில், நடந்த முதலாவது மாநில அளவிலான கோல் ஷாட் பால் சாம்பியன்ஷிப் போட்டியை, பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், கவுரவ விருந்தினராக வஜ்ரா துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி நிலையம் கிஷோர் குமார் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், 16 அணிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில், உடற் பயிற்சி ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
