/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில ேஹண்ட்பால் போட்டி எம்.எல்.ஏ,, பரிசு வழங்கல்
/
மாநில ேஹண்ட்பால் போட்டி எம்.எல்.ஏ,, பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 19, 2025 05:39 AM

புதுச்சேரி : மாநில அளவிலான ேஹண்ட்பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சுழல் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி மாநில அமைச்சூர் ஹேண்ட்பால் சங்கம் மற்றும் மாவட்ட ஹேண்பால் சங்கம் இணைந்து, 9வது மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது. இதில், ஆண்கள் பிரிவில், அரியாங்குப்பம் அணி முதல் இடம், வில்லியனூர் அணி இரண்டாம் இடம், பெத்திசெமினார் பள்ளி மூன்றாம் இடம், காரைக்கால் அணி நான்காம் இடம் பிடித்தன.
இதேபோல், பெண்கள் பிரிவில், வில்லியனூர் அணி முதல் இடம், அரியாங்குப்பம் அணி இரண்டாம் இடம்,, புதுச்சேரி அணி ௩ம் இடம், காரைக்கால் அணி நான்காம் இடம் பெற்றன. இதன் பரிசளிப்பு விழாவில், சங்க மாநில பொது செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். உழவர்கரை ஹேண்ட்பால் சங்க தலைவர் தேவராஜ், காவல் துறை ஹேண்ட்பால் சங்க தலைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பங்கேற்று ஆண்கள் அணிக்கான சுழல் கோப்பை மற்றும் பரிசுகளையும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கோப்பையை வழங்கினர். விஜயராஜா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜா, இணை செயலாளர் தியாகு, கொரிதம், பொருளாளர் பெருமாள், ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.