/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில ஹாக்கி போட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
/
மாநில ஹாக்கி போட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
ADDED : செப் 04, 2025 12:55 AM

பாகூர்: குருவிநத்தத்தில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.
குருவிநத்தம் மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், மேஜர் தயான்சந்த் 120வது பிறந்த நாளை முன்னிட்டு, குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி, சென்னை, கடலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றனர்.
இதில், புதுச்சேரி ஜேம்ஸ் ஹாக்கி கிளப் அணி முதல் இடமும், குருவிநத்தம் மேஜர் தயான் சந்த் ஹாக்கி கிளப் இரண்டாம் இடமும், திருவாரூர் ஹாக்கி அணி மூன்றாம் இடமும் பிடித்தன.
இதற்கான பரிசளிப்பு விழாவில், ஹாக்கி பயிற்சியாளர் மூர்த்தி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை சேர்மன் தவமுருகன் முன்னிலை வகித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பரிசு கோப்பை வழங்கினார். மேலும், முதலிடம் பிடித்த அணிக்கு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை செவிலியர் அதிகாரி சங்கரி ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு தலைமையாசிரியர் முத்துக்கிருஷ்ணன் ரூ.7 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு மின் துறை இளநிலை பொறியாளர் ஸ்டாலின் ரூ. 5 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த அணிக்கு இந்தியன் ரயில்வே சந்தியா ரூ.4 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை, மேஜர் தயான்சந்த் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.