/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மங்கலம் கிராமத்தில் மாநில கபடி போட்டி
/
மங்கலம் கிராமத்தில் மாநில கபடி போட்டி
ADDED : ஏப் 10, 2025 04:26 AM

வில்லியனுார்: மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார். புதுச்சேரி மாநில கபடி சங்கம் அனுமதியோடு மங்கலம் சிங்காரவேல் மற்றும் ஞானவேல் பிரண்ட்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு கபடி போட்டி மங்கலம் கிராமத்தில் 2 நாட்கள் நடந்தது.
இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 34 ஆடவர் அணிகள் பங்கேற்றன. பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. இறுதிச் சுற்றில் மங்கலம் சிங்காரவேல் மற்றும் ஞானவேல் பிரண்ட்ஸ் அணி முதலிடத்தையும், சாவடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2ம் இடத்தையும், அரியாங்குப்பம் ஜெயா பிரதர்ஸ் கபடி அணி 3ம் இடத்தையும், சாவடி ராஜா பிரதர்ஸ் அணி 4ம் இடத்தை பிடித்தன.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் துணை சேர்மன் சங்கர், மோகித் ரவிக்குமார், புண்ணியகொடி, இன்ஸ்பெக்டர் வேலயன், லேபர் டிபார்ட்மண்ட் ஏழுமலை ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.