ADDED : ஜன 18, 2026 06:49 AM

புதுச்சேரி: பொங்கல் விழாவையொட்டி, மாநில அளவிலான கபடி மற்றும் கோகோ போட்டி நேற்று நடந்தது.
கருவடிக்குப்பம், பாத்திமா ஆண்கள் மேனிலைப்பள்ளியில், கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம், ஈரம் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில், பொங்கல் விளையாட்டு விழாவையொட்டி மாநில அளவிலான கபடி, கோகோ போட்டிகள் நடந்தது. போட்டியை லெனின்துரை தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மாணவர் அமைப்பு துணைச் செயலாளர் அஸ்வினி கலந்து கெண்டார்.100க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை மற்றும் ஒருங்கிணைப்பாளர் முரளி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை சாமிபிள்ளைத்தோட்டம் காமராஜர் மணி மண்டபத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

