/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில கராத்தே போட்டி பரிசளிப்பு விழா
/
மாநில கராத்தே போட்டி பரிசளிப்பு விழா
ADDED : நவ 27, 2025 04:28 AM

புதுச்சேரி: கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சென்டோ கென் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
போட்டியில், 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா மற்றும் சாய் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், கராத்தே சங்க தலைவர் வளவன், செயலாளர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினர். காங்., மாநில செயலாளர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில், கராத்தே சங்க பொருளாளர் சுந்தரராஜ், சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணி, சீனியர் பயிற்சியாளர் சுகுமாரன், திருக்கனுார் சுப்ரமணிய பாரதி ஆங்கிலப்பள்ளி முதல்வர் சம்பத், மதகடிப்பட்டு பாரத தேவி பள்ளி தாளாளர் இளமதி அழகன், திருபுவனை அன்னை வித்யா மந்திர் தனசெல்வம் வாழ்த்தி பேசினர்.
நடுவர்களாக கோபாலகிருஷ்ணன், செந்தில், கவிதா, லலிதா, கரண், சரண், .விக்னேஸ்வரன், யுகேந்திரன் செயல்பட்டனர்.
கராத்தே சங்க இணைச்செயலாளர் மதி ஒளி நன்றி கூறினர்.

