/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான அபாகஸ் வேத கணித போட்டி
/
மாநில அளவிலான அபாகஸ் வேத கணித போட்டி
ADDED : நவ 26, 2024 06:35 AM

பாகூர்: ஸ்ரீ சுபிக்ஷம் அபாகஸ் மற்றும் வேத கணித நிறுவனத்தின் சார்பில், 2ம் ஆண்டு மாநில அளவிலான அபாகஸ் மற்றும் வேத கணித போட்டி பாகூரில் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தியாகராஜன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தார். சிவசங்கரன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார். இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ--மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - -மாணவிகளுக்கும், பாரத நாட்டியம், யோகா, தட்டச்சு மற்றும் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை மூன்றாம் வட்ட துணை ஆய்வாளர் லிங்கசாமி, புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலர் நேர்முக உதவியாளர் பால்ராஜ், பவானி வித்யாஸ்ரம் பள்ளியின் முதல்வர் ஏஞ்சலின் தேவகுமாரி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
முன்னதாக, அன்பழகன், பாபு ஷண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுபிக்ஷம் அபாகஸ் மற்றும் வேத கணித நிறுவனர் நாகலட்சுமி ஹரிஹரன் செய்திருந்தார்.

