ADDED : ஜூலை 07, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:லாஸ்பேட்டை புட்பால் கிளப் சார்பில் தமிழக மற்றும் புதுச்சேரி அணிகள் பங்கேற்கும் மாநிலங்கள் அளவிலான கால்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது.
லாஸ்பேட்டை புட்பால் கிளப் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவிலான கால்பந்து போட்டி, லாஸ்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று துவங்கியது.
இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியை, லாஸ்பேட்டை மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் தண்டபாணி துவக்கி வைத்தார்.
விழாவில், லாஸ்பேட்டை புட்பால் கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.