/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான கராத்தே போட்டி பரிசளிப்பு
/
மாநில அளவிலான கராத்தே போட்டி பரிசளிப்பு
ADDED : நவ 21, 2024 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கவுண்டன்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் வளவன், மாநில கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினர். சங்க இணைச் செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். மூத்த நிர்வாகிகள் ஜோதிமணி, மூர்த்தி, ஆளவந்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்டா மற்றும் சியாய் பிரிவுகளாக நடந்த போட்டிகளை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளுக்கு சீனியர் பயிற்சியாளர்கள் வெங்கடாஜலபதி, அமிர்தராஜ், அசோக், அழகப்பன், குமரன், பாலச்சந்தர், பயிற்சியாளர்கள் கோபால், சந்துரு, கஜலட்சுமி, ஜான்சி ராணி, தமிழ்ச்செல்வி , கபிலன், துளசி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.துணைத் தலைவர் மதிஒளி நன்றி கூறினார். தொடர்ந்து, வெற்றி பெற்ற கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

