/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
/
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 07, 2025 05:51 AM

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 2024--25 கல்வியாண்டிற்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் தொடக்கப் பள்ளி பிரிவில் 8 படைப்புகளும், நடுநிலைப் பிரிவில் 12 படைப்புகள், உயர்நிலை பிரிவில் 12 படைப்புகள், மேல்நிலை பிரிவில் 8 படைப்புகள், ஆசிரியர்களின் 15 படைப்புகள் என, மொத்தம் 55 படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன.
மாநில அறிவியல் கண்காட்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம் ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்பள்ளி நிலையில் 19 அறிவியல் படைப்புகள், நடுநிலை 30, உயர்நிலை 30, மேல்நிலை 19, ஆசிரியர்களின் 29 அறிவியல் படைப்புகள் என 127 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.
15 நபர்கள் கொண்ட மதிப்பீட்டு ஆசிரியர் குழு கண்காட்சியில் இடம்பெற்ற மாதிரி படைப்புகளை தேர்வு செய்தனர்.
கண்காட்சியை நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, பாகூர், வில்லியனுார், அரியாங்குப்பம் கொம்யூன் பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.