/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவில் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
/
மாநில அளவில் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
மாநில அளவில் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
மாநில அளவில் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
ADDED : ஜூலை 10, 2025 07:08 AM

பாகூர் : பாண்டிச்சேரி அமெச்சூர் டென்னிக்காய்ட் அசோசியேஷன், கிராமப்புற சகோதரர்கள் விளையாட்டு மன்றம் இணைந்து, மாநில அளவிலான 30வது சப் ஜூனியர், ஜூனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பாகூரில் நடத்தின.
போட்டியில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். சப் ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் மனோஜ் முதலிடம், ஹரிஷ் இரண்டாமிடம், ரக்சன்குமார் மூன்றாம் இடம் பிடித்தனர்.
சிறுமியர் பிரிவில் காவியா முதலிடம், பவிஷிகா இரண்டாம் இடம், திவ்யஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர். இரட்டையர் பிரிவில், ஹரிஷ் - ரக்சன்குமார் முதலிடம், தனுஷ் - பிரதீப் இரண்டாம் இடம், மனோஜ் நந்தன் மூன்றாம் இடம் பிடித்தனர். சிறுமியர் பிரிவில், காவியா - பவிஷிகா முதலிடம், திவ்யஸ்ரீ - யாழினி இரண்டாம் இடம், சுவாதி - நிரோஷா மூன்றாம் இடம் பிடித்தனர்.
இதேபோல், ஜூனியர் சிறுவர் ஒற்றையர் பிரிவில் நிதீஷ்குமார் முதலிடம், புகழ் இரண்டாம் இடம், வெங்கட்ராமன் மூன்றாம் இடம் பிடித்தனர். சிறுமியர் ஒற்றையர் பிரிவில் பவித்ரா முதலிடம், நித்யஸ்ரீ இரண்டாம் இடம், ராகவி மூன்றாம் இடம் பிடித்தனர். சிறுவர் இரட்டையர் பிரிவில் புகழ் - பிரபாகரன் முதலிடம், வெங்கட்ராமன், நிதிஷ் இரண்டாம் இடம், நிதிஷ்குமார் - மணிகண்டன் மூன்றாம் இடம் பிடித்தனர். சிறுமியர் இரட்டையர் பிரிவில், பவித்ரா - ராகவி முதலிடம், நித்யஸ்ரீ- அக் ஷயா இரண்டாம் இடம், சந்தியா - ரித்து பர்ணா மூன்றாம் இடம் பிடித்தனர்.
பரிசளிப்பு விழாவில், டென்னிக்காய்ட் அசோசியேஷன் தலைவர் ராமு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக துணை சபாநாயர் ராஜவேலு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுவழங்கி வாழ்த்தினர்.
சங்க செயலாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.