/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான யோகா போட்டி பரிசளிப்பு விழா
/
மாநில அளவிலான யோகா போட்டி பரிசளிப்பு விழா
ADDED : பிப் 28, 2024 07:17 AM

புதுச்சேரி : வில்லியனுாரில், புதுச்சேரி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் அமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.
போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மத்தியாசனம், மலாசனா, கருடாசனா, உத்திராசனா, சர்வாங்க சனா, உள்ளிட்ட 20 வகையான ஆசனங்களை செய்து மாணவ மாணவிகள் அசத்தினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் யோகா ஒருங்கிணைப்பாளர் மாதவி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைவினை கலைஞர் முனுசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

