/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில மாரத்தான் ஓட்டம்: 5ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது
/
மாநில மாரத்தான் ஓட்டம்: 5ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது
மாநில மாரத்தான் ஓட்டம்: 5ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது
மாநில மாரத்தான் ஓட்டம்: 5ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது
ADDED : ஜன 02, 2025 06:31 AM
புதுச்சேரி: விழுப்புரத்தில்வரும் 5ம் தேதி மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.
போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி,விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம்சார்பில் நடக்கும் இந்த மாரத்தான் ஓட்டம் வரும் 5ம் தேதி காலை 6:00 மணிக்க விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் துவங்குகிறது.
போட்டி16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டஆடவர் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடக்கிறது.
போட்டியில் பங்கேற்பவர்கள் முழு உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.பள்ளி சான்று, ஆதார் கார்டு நகல்களுடன், விழுப்புரம் மாவட்ட தடகள சங்க செயலாளரிடம்இன்று2ம் தேதி மாலை 5:00 மணிக்குள், நுழைவு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் 16 மற்றும் 18 வயது பிரிவினருக்கு நுழைவு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், அனைத்து பிரிவிலும் முதலில் வரக்கூடிய 50 நபர்களுக்கு டீ-சர்ட், வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 98944 22234 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.