/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., தலைவர் பிறந்த நாள் மாநில செயலாளர் வாழ்த்து
/
காங்., தலைவர் பிறந்த நாள் மாநில செயலாளர் வாழ்த்து
ADDED : அக் 07, 2025 01:21 AM

புதுச்சேரி,; காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில செயலாளர் மோகன்தாஸ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடினார். இதையொட்டி, ஏம்பலம் தொகுதி காங்., நிர்வாகிகள் மாநில செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் ஊர்வலமாக அவரது வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதில், தெற்கு மாவட்ட தலைவர் குமரேஸ்வரன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ஜெயபாலன், மாநில செயலாளர்கள் கனிகண்ணன், பாலமுரளி, இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் சசிதரன், ராஜிவ் பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் பாஸ்கரன், தொகுதி மகளிர் காங்., தலைவி புஷ்பா, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் குமரன், ராஜேந்திரன், கனகசபை, பாஸ்கரன், செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.