/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில சிலம்பம் போட்டி; முதல்வர் துவக்கி வைப்பு
/
மாநில சிலம்பம் போட்டி; முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : அக் 15, 2025 07:42 AM

புதுச்சேரி; மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில், உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சிலம்பம் போட்டி நடந்தது. அதில், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த போட்டிகளில் மாநிலம் முழுதும் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, பாண்டிச்சேரி ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அபுல்கலாம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆனந்தன், துணை பொதுச் செயலாளர் தமிழரசன், ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.