புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து :த.வெ.க., தேர்தல் அறிக்கை
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து :த.வெ.க., தேர்தல் அறிக்கை
ADDED : ஏப் 04, 2026 08:16 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்த அக்கட்சி தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதன் விபரம் வருமாறு:
* கவர்னர் தலையீடு இல்லாத முழு மாநில அந்தஸ்து பெற சட்டப்படி 100 சதவீதம் முயற்சிப்போம்.
* ஆட்சி அமைந்த 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
* மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
* அனைத்து அரசு துறை காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
*100 சதவீத பயிர் காப்பீடு வழங்கப்படும்.
* மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு டீசலுக்கு லிட்டருக்கு ரூ.20 மானியம் வழங்கப்படும்.
* குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
* புதுச்சேரி மாநில கலை, அறிவியல் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
* காரைக்கால், மாகி, ஏனாமில் 25 சதவீத வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
