/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் அமைச்சருக்கு சிலை: முதல்வரிடம் கோரிக்கை
/
முன்னாள் அமைச்சருக்கு சிலை: முதல்வரிடம் கோரிக்கை
ADDED : டிச 24, 2024 05:56 AM

புதுச்சேரி: மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு, சிலை அமைக்ககோரி, சிலை அமைப்பு கேட்புக்குழு தலைவர் பாலாஜி தலைமையில் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநில சபாநாயகர், அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் கண்ணன்.
இவரது காலங்களில் மக்களுக்கு பல நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியுள்ளார்.
எனவே, முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு முழு உருவச்சிலையை, புதிதாக கட்டப்படவுள்ள சட்டசபை வளாகத்தில் அமைத்திட வேண்டும். அவரின் பெயரை நினைவுக்கூறும் வகையில், வில்லியனுார் மெயின் ரோட்டை 'மக்கள் தலைவர் கண்ணன் சாலை' என பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தார்.