/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : டிச 23, 2025 04:29 AM
புதுச்சேரி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வு பெற இருப்பவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகை மிக மிக குறைவாக இருப்பதால் ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.மத்திய அரசின் ஆணையைப் பின்பற்றி புதுச்சேரி அரசாங்கம் 2004ம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களும் ஏற்கனவே புதிய ஓய்வூதியதிட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களும் விண்ணப்பிக்க ஆணை பிறப்பித்தது.மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை போல் பலன் அளிக்கவில்லை.
இருப்பினும், ஓரளவு நன்மை இருப்பதை கருதி விண்ணப்பித்த ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓரளவு பலன் கிடைக்க நேரிடும். ஏற்கனவே மத்திய கால நீட்டிப்பு அறிவிப்பாணை கடந்த நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்ததை புதுச்சேரி அரசும் காலம் நீட்டிப்பு செய்தது.
ஏற்கனவே ஓய்வு பெற்றவர்கள்ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் பணிக்கொடை மற்றும் இதர பணப் பலன்களைசெலவு செய்து விட்டு ஓய்வு ஊதியமும் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.