/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மானிய தொகை வழங்க நடவடிக்கை
/
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மானிய தொகை வழங்க நடவடிக்கை
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மானிய தொகை வழங்க நடவடிக்கை
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மானிய தொகை வழங்க நடவடிக்கை
ADDED : செப் 23, 2025 08:07 AM
புதுச்சேரி : முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள் மற்றும் 60 வயதைக் கடந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, விழாக்கால மானிய தொகையாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து புதுச்சேரி முப்படை நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி முப்படை நலத்துறை மூலமாக, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு, புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 60 வயது நிறைவுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான விழாக்கால மானியத் தொகை 5,000 ரூபாய் வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இது சம்மந்தமாக பயனாளிகள், இத்துறை வழங்கிய அசல் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விபரத்துடன் இவ்வலுவலகத்திற்கு நேரில் வந்து நாளை (24ம் தேதி) முதல் அக்டோபர் 10ம் தேதிக்குள் கையொப்பமிட்டு, அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் பிரதியை சமர்பிக்க வேண்டும். இதபோல், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மண்டலங்களின் பயனாளிகள், மண்டல நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மேற்கூறிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இது பற்றிய விபரங்கள் அறிய புதுச்சேரி முப்படை நலத்துறை தொலைபேசி எண் 0413-2253107 மற்றும் 2250575 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.