/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் நகராட்சி ஆணையர் தகவல்
/
தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் நகராட்சி ஆணையர் தகவல்
தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் நகராட்சி ஆணையர் தகவல்
தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் நகராட்சி ஆணையர் தகவல்
ADDED : ஆக 18, 2025 04:08 AM
புதுச்சேரி: தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை மையம் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில், சமீபகாலமாக நகரப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டு வருகின்றனர். விலங்கு நல வாரியத்தின் புதிய விதிமுறைகளால், நாய்களை நகராட்சி நிர்வாகத்தால் பிடிக்க முடியாமல் இருந்து வருகிறது.
புதுச்சேரியில், தற்போது, 50 ஆயிரத்திற்கு தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செ ய்துள்ளது.
அதற்காக புதிய பஸ் நிலையம் அருகில் 2.5 கோடி மதிப்பீட்டில், கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.