/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருடு போன தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு
/
திருடு போன தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 31, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:  அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி மகாலட்சுமி, 38. இவரது  1 சவரன் செயின், கடந்த 1ம் தேதி, காணாமல் போனது. இதுகுறித்து, அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.
இந்நிலையில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு நேற்று தரிசனம் செய்ய சென்ற ஒருவர் கோவில் உள்ளே செயின் கிடந்தை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த நகை, காணாமல் போன, செயின் என்பதும், அதை எடுத்து சென்றவர், கோவிலில், போட்டு சென்றதும் தெரியவந்தது.
செயினை, மகாலட்சுமி மற்றும் அவரது கணவரிடம், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஒப்படைத்தார்.

