/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்துங்கள் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
/
கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்துங்கள் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்துங்கள் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்துங்கள் அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2024 06:52 AM
புதுச்சேரி : மனித குல அழிவிற்கு காரணமான செயல்களை அனுமதித்தால், எதிர்காலத்தில் நம் மாநிலம் பெருத்த கலாசார சீர்கேட்டை நோக்கிச் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை, ஆன்லைன் புக்கிங் விபசாரம், மசாஜ்கள், டாட்டூபோடுவது உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன.சுற்றுலாப் பயணிகள் மூலம் நமக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனித அழிவிற்கு காரணமான செயல்களைஅனுமதித்தால்எதிர்காலத்தில் நம் மாநிலம்பெருத்த கலாசார சீர்கேட்டை நோக்கிச் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆன்மிகம், கடவுள்பக்தி ஆகியவற்றின் மீது அதிக நம்பிக்கைகொண்டமுதல்வர் போதை, விபசாரம், டாட்டூ கலாசாரம் ஆகிய வற்றை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அனுமதி வழங்கி உள்ள மசாஜ் கிளப்கள், டாட்டூ சென்டர்கள் ஆகியவற்றின் அனுமதியை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.
அனுமதியின்றி, பெட்டிக்கடை போல செயல்படும் டாட்டூ சென்டர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நம் மாநிலத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை உடனடியாக தடை செய்ய போலீசாருக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.