/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல் எச்சரிக்கை: போலீசார் விழிப்புணர்வு
/
புயல் எச்சரிக்கை: போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 27, 2024 11:27 PM

திருக்கனுார் : கைக்கிலப்பட்டில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் எதிரொலியாக புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி உத்தரவின் பேரில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள கைக்கிலப்பட்டு கிராமத்திற்கு சென்று, பொதுமக்களிடம் புயல் எச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதில், தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், கனமழையின் போது அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் பராமரிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும், புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.