UPDATED : அக் 04, 2026 01:19 AM
ADDED : அக் 04, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருக்கனுார் – மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில், தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றுக்குள் நேற்று காலை 10:30 மணியளவில் தெருநாய் ஒன்று தவறி விழுந்தது.
50 அடி ஆழ கிணற்றில் விழுந்த நாய் வெளியே வர முடியாமல் சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள், திருக்கனுார் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
திருக்கனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர் அசோக், பாதுகாப்பு உபகரணங்களுடன் 50 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
