UPDATED : அக் 12, 2026 07:58 PM
ADDED : அக் 12, 2026 07:44 PM
பொது இடத்தில் ரகளை
ரெட்டியார்பாளையம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் விஷ்ணுபுரத்தான் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அரும்பார்த்தபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் பார் அருகில், குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய செங்கல்பட்டு பொத்தேரியை சேர்ந்த முனியப்பன் சஞ்சய்.19; என்பவரை கைது செய்தனர்.
காலாப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருபாகரண் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரியகாலாப்பட்டு வீரன் கோவில் தெருவில், குடிபோதையில் பொது இடத்தில், ஆபாசமாக நடந்து கொண்ட, மரக்காணம் வெங்கடேசன் மகன், மணிகண்டன்,27; என்பவரை கைது செய்தனர்.
உருளையன்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மறைமலையடிகள் சாலை தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட, சிங்கனுார் ஆறுமுகம் மகன், சஞ்சீவ்ராஜ்,31; என்பவரை கைது செய்தனர்.
திருக்கனுார் போலீசார் நேற்று முன்தினம் கொடாத்துார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை ரோட்டில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட வி.நெற்குணம் கோதண்டராமன் மகன்,சுந்தராமன்,21; என்பவரை கைது செய்தனர்.
முதலியார்பேட்டை சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நுாறடி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பார் அருகே பொது இடத்தில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட வேல்ராம்பட்டு, கந்தசாமி மகன் செல்வராஜ்,48 என்பவரை கைது செய்தனர்.
முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அன்னை தெரசா நகரில், பொது இடத்தில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட கொம்பாக்கம், நாகேந்திரன் மகன், சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
