/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்
/
உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்
ADDED : நவ 13, 2024 07:04 AM

புதுச்சேரி : மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி இறுதி கட்ட போராட்டம் நடந்தது.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி 8 கட்ட போராட்டங்கள் நடத்த முடிவ செய்யப்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள் எதிரில் 7 கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இறுதி கட்டமாக சுதேசி மில் அருகே நேற்று நடந்த போராட்டத்திற்கு கழகத் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். சேர்மன் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ராஜன் வரவேற்றார்.
செயலாளர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் நித்தியானந்தன், செயலாளர் ரவிக்குமார், இணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர். முன்னதாக கடலுார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

