/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் கையேட்டை வெளியிட மாணவர், பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை
/
சென்டாக் கையேட்டை வெளியிட மாணவர், பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை
சென்டாக் கையேட்டை வெளியிட மாணவர், பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை
சென்டாக் கையேட்டை வெளியிட மாணவர், பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2025 04:53 AM
புதுச்சேரி: மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கையேட்டை உடனடியாக வெளியிட்டு விண்ணப்பங்களை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு:
மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வுகளில் தாமதம் ஆவதால், கடைசி நேரத்தில் வெளி மாநில மாணவர்கள் போலி ஆவணங்களை கொடுத்து மருத்துவம் படிக்கும் நிலை தொடர்கிறது.
இதற்கு காரணம், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அரசும், சுகாதாரத்துறையும் காலதாமதமாகவும், குறைவாகவும் பெறுகிறது. இதனால் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் சீட் மேட்ரிக்ஸ் வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதம், கலந்தாய்விலும் ஏற்படுகிறது.
இதனால் மாணவர்கள் தகுதியான கல்லூரிகளில் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்தாண்டு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கையேடு மற்றும் சீட் மேட்ரிக்சை வெளியிட்டு, விண்ணப்பங்களை பெற்று காலத்தோடு கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.
இந்த ஆண்டு நீட் மதிப்பெண் குறைந்துள்ளது. இதனை பயன்படுத்தி புதுச்சேரி மாணவர்களுக்கான ஜிப்மர் இட ஒதுக்கீடு மற்றும் சென்டாக் வழியாக பிற மாநில மாணவர்கள் முறைகேடான ஆவணங்கள் கொடுத்து புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை பிடிக்கும் நிலை உள்ளது.
இதனை தடுக்க அரசு உடனடியாக சென்டாக் மூலம் விண்ணப்பங்களை பெற்று, முறையாக ஆய்வு செய்து, தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
மேலும், மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கையேட்டை வெளியிடும் போதே இந்தாண்டு சென்டாக் மூலம் அரசு இடஒதுக்கீட்டில் சேரும் அனைவருக்கும் காமராஜர் கல்வி நிதி உதவி உண்டா? இல்லையா? என்பதை அறிவிக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான முழு கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற உத்தரவிற்கு உடன் அரசாணை வெளியிட வேண்டும். மேலும், கடந்த மூன்றாண்டிற்கான நிதியை உடன் வழங்க வேண்டும்.
மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர் மட்டுமே ஜிப்மர் மற்றும் சென்டாக்கில் மாநில இடஒதுக்கீட்டு இடங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே காமராஜர் கல்வி நிதி உதவி அளிக்கப்படும் என கொள்கை முடிவை அரசு அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கண்டிப்பாக மூன்றாண்டு புதுச்சேரியில் படித்திருக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும்.