ADDED : ஜூன் 14, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் அருகே கஞ்சா விற்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்த சுல்தான்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகமான முறையில் நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவர், லாஸ்பேட்டை பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.பி.ஏ., 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, 2 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.