/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: சட்டசபையை முற்றுகையிட்டு காங்., போராட்டம்
/
மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: சட்டசபையை முற்றுகையிட்டு காங்., போராட்டம்
மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: சட்டசபையை முற்றுகையிட்டு காங்., போராட்டம்
மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: சட்டசபையை முற்றுகையிட்டு காங்., போராட்டம்
ADDED : ஜன 22, 2025 07:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மகிளா காங்., சட்டசபையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரிதொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி மற்றும் அவரது நண்பர் கடந்த 11ம் தேதி, கல்லுாரி வளாகத்தில் நடந்து சென்றபோது,வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 மர்ம நபர்கள், மாணவியிடம் தகராறு செய்து தாக்கினர்.காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து 2 சிறார்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
மாணவி ஏன் நேரடியாக புகார் அளிக்கவில்லை என, அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக் கழக மாணவிக்கு நியாயம் கேட்டு சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மகிளா காங்., அறிவித்தது.
அதன்படி, ஜென்மராகினி ஆலயம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்., கட்சி தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., சீனியர் தலைவர் தேவதாஸ், வக்கறிஞர் மருதுபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைவர்கள் கண்டன உரை முடிந்ததும், மகிளா காங்., நிர்வாகிகள் திடீரென ஊர்வலமாக புறப்பட்டு சட்டசபை நோக்கி சென்றனர். சட்டசபை காவலர்கள் நுழைவு வாயிலை இழுத்து மூடினர்.
மகிளா காங்., நிர்வாகிகள் முதல்வரிடம் மனு அளிக்க வேண்டும் என, கோரினர்.
சட்டசபை காவலர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால், நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நிர்வாகிகள் சட்டசபை கேட் மீது ஏறி குதிக்க முயன்றனர்.
பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மகிளா காங்., நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுப்பட்டதால், போராட்டக்காரர்களை அகற்ற முடியாமல் போலீசார் திணறினர்.
ஒரு வழியாக சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட மகிளா காங்., நிர்வாகிகளை குண்டு கட்டாக அப்புறப்படுத்தி, போலீஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மகிளா காங்., நிர்வாகிகள் 10 பேர் மட்டும் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டசபை முன்பு திடீரென நடந்த மகிளா காங்., நிர்வாகிகள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.