/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை; திருக்கனுார் அருகே சோகம்
/
தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை; திருக்கனுார் அருகே சோகம்
தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை; திருக்கனுார் அருகே சோகம்
தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை; திருக்கனுார் அருகே சோகம்
ADDED : ஏப் 07, 2025 06:13 AM
திருக்கனுார்; திருக்கனுார் அருகே தேர்வில் தோல்வியடைந்ததால், மனமுடைந்த பிளஸ் 1 மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு டி.வி.சென்டர் தெருவை சேர்ந்தவர் நாவப்பன்; கூலி தொழிலாளி. இவரது மகள் லஷ்னா, 16; பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் 4 பாடங்களில் லஷ்னா தோல்வி அடைந்ததாக தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அவர், கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று காலை 6:30 மணி அளவில் வீட்டில் லஷ்னா துாக்குப்போட்டுக் கொண்டார்.
அவரை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரது தாய் லட்சுமி புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

