sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடலில் மூழ்கி மாணவி பலி இரு மாணவர்கள் மாயம்

கடலில் மூழ்கி மாணவி பலி இரு மாணவர்கள் மாயம்

கடலில் மூழ்கி மாணவி பலி இரு மாணவர்கள் மாயம்


ADDED : ஜன 31, 2024 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 01:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்:தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு கல்லுாரி இறுதி ஆண்டு மாணவ - மாணவியர், 14 பேர் நேற்று மதியம் காரைக்கால் கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டனர்.

பின், திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மாணவி ஹேமாமாலினி, 20, திப்பிராஜபுரம் ரித்தன்யா, 18, ஆகிய இருவரும் கடலில் குளித்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.

இதைப்பார்த்த சக மாணவர்கள் திப்பிராஜபுரம் புகழேந்தி, 25, எஸ்.புத்துார் அபிலாஷ், 20, வலையப்பேட்டை ஜெகதீஷ், 20, மைக்கல், 20, ஆகியோர் கடலில் இறங்கி மாணவியரை மீட்க முயன்றனர். அவர்களும் அலையில் சிக்கினர்.

அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி ரித்தன்யா, புகழேந்தி, மைக்கல் ஆகியோரை மீட்டனர். ஹேமாமாலினி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அபிலாஷ், ஜெகதீஷ் ஆகிய இருவரும் மாயமாகினர்.

மீட்கப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

காரைக்கால் போலீசார் இறந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாயமான மாணவர்கள் இருவரை, போலீசார் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us