/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்கள் கோஷ்டி மோதல் கண்டமங்கலத்தில் பரபரப்பு
/
மாணவர்கள் கோஷ்டி மோதல் கண்டமங்கலத்தில் பரபரப்பு
ADDED : ஜன 28, 2025 06:21 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டனர். கண்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென இரண்டு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை நேரில் கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மாணவர்கள் கோஷ்டியாக மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.