/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தினத்தையொட்டி மாணவர்கள் ஊர்வலம்
/
சுதந்திர தினத்தையொட்டி மாணவர்கள் ஊர்வலம்
ADDED : ஆக 14, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் தேசிய கொடியுடன் ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலத்தை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை தவளக்குப்பம் செயின்ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் ஆங்கில பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய கொடியுடன் மாணவர்கள் முழுக்கமிட்டு சென்றனர். ஊர்வலம் தவளக்குப்பம் தனியார் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது.