/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பத்தில் மோதிய மாணவர்கள் சிறப்பு பஸ்: பாகூரில் திடீர் பரபரப்பு

UPDATED : ஜன 03, 2026 09:03 AM
ADDED : ஜன 03, 2026 04:35 AM

பாகூர்: மாணவர்கள் சிறப்பு பஸ் மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கல்வித்துறை சார்பில், பாகூர் அடுத்த ஆராய்ச்சிக்குப்ப த்தில் இருந்து புதுச்சேரி பழைய பஸ் நிலையம் வரை மாணவிகள் சிறப்பு பஸ் (தடம் எண் 6ஜி) இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நேற்று காலை 7:00 மணிக்கு ஆராய்ச்சிக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டது. இரு மாணவிகள் மட்டுமே இருந்தனர்.
பாகூர் தீயணைப்பு நிலையம் அருகே சாலை வளைவில் சென்றபோது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
அதில், மின்கம்பம் இரண்டாக உடைந்து, மின்கம்பிகள் அறுந்து பஸ்சின் மீது விழுந்தன.
அதனைக் கண்ட பஸ்சில் இருந்த மாணவிகள் அலறினர். டிரைவர் உடனடியாக பஸ்சை பின்புறமாக இயக்கி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். பாதுகாப்பு கருதி உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, அவ்வழியாக வந்த மற்றொரு சிறப்பு பஸ்சில் மாணவிகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவிகள் சிறப்பு பஸ் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் பாகூரில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.